ஊழல் ஒழிப்பு

ஜூன் 11, 2016

ஊழலுக்கு வழிவகிக்கும் சட்டம்நடை முறை இருக்கையில்
ஊழலொழிக் கும்முயற்சிகள் வீணாம்

அரசு ஊழியர் ஊதியம் கூட நேர்மையும்
அர்பணிப்பும் கூடவேண்டு மன்றோ?

அரசுபணியில் தாமதம்தவிர்க் கஊழல் ஒழிய
ஒற்றைசாளர முறை தேவை

அஞ்சல்வழி அரசுசேவை பெறமுடியுன் நிலைவரின்
இலஞ்சம் முற்றிலும் ஒழிந்திடும்

 

 

 

 

Advertisements

தமிழகம்

செப்ரெம்பர் 10, 2014

குடும்பக்கட் டுப்பாடுநா மிருவர்நமக் கொருவ்ரென
கடும்பரப்புரை யால்மக்கள் தொகைமிக குறைந்து
அயல்மாநிலத் தாரை அதிகஅளவில் தொழிற்சாலை
வயல்வேலைக் குஅழைத்து வரும்நிலை நீடித்து
இல்லவேலைக் கும்அவரை எதிர்பார்க்கும வலம்வந்து
இல்லறத் துணைக்கும் நாடும்நிலை வந்திடின்
தமிழினம் என்று தரணியில் இருந்திடுமோ?
தமிழ்மொழி பண்பாடு இறவாது பிழைத்திடுமோ

குறட்பாக்கள்

ஜூலை 22, 2012

கடுஞ்சொல்லும் காட்சிக்கு கொடுமையும் தற்காப்பாகும்
கெடுக்க அஞ்சுவர் பலர் என்பதால்.

பகைவர் தமை இயலார் என்றெண்ணி செயல்படும்
வகைபொறுமை இருத்தல் தீதாம்

இனியசெய்வாரை இயலார் என்றெண்ணி இன்னா
எண்ணிடுவர் கயவருள் கயவராவர்

பிறர்பெருந் தன்மை போற்றாது அவரை
புறக்கணித்தல் கீழோர் செயலாம்

சொல்வன்மை நன்மை செயர்கன்றி பிறரை தீய
செயற்குதூண் டுதலாய் இருத்தலாகா

பெற்றோர் பொறுப்பை ஏற்று அரசுஒருவர்க்கு உதவல்
பொறுப்பின்மை வளர்க்கும் செயலாம்

பிறர்குணம் அறிந்து செயல்படும் திரநுடையார்
பெருவர் உயர்வும் சிறப்பும்

இருவரிடை ஏற்படும் நட்புஅவர் உற்றார்
உறவினரிடை பரவுதல் நன்றாம்

முதியவர் பட்டறிவை முழுதும் பயன்படுத்தின்
விரைந்திடும் குடியின் உயர்வு

ர்

சேமிப்பு

மார்ச் 17, 2012

ஈட்டிய பொருளை நுகராது ஈயாது
நாட்டிற்கே விடுவர்சிறந் தோரே

சேமிப்பு நாட்டிற்கு நன்றெனின் ஈயாது
சேமிப்பார் போற்றற்குரி யன்றோ?

தந்துபுகழ் பெறாது சேமித்து நாட்டிற்கு
நன்றுசெய்வா ரைஇகழ்தல் தகுமோ?

குறட்பாக்கள்(தொடர்ச்சி)

ஏப்ரல் 21, 2011

எண்ணங்கள் நிகழ்வுகளை மறைக்க விழைவார்
எவரிடமும் நெருங்கி பழகார்

மறைத்த்ற்கு ஒன்றுமில்லா வாழ்வுடையோர் உறைவிடமாம்
நற்பண்புகள் யாவிற் கும்

மனைவியை மகிழ்விக்க பெற்றோரை வருத்தும்மகன்
பின்னாளில் வருந்த நேரிடலாம்

மனைவியினும் உயர்வாய் மதித்தலே அன்னைக்கு
மகன்காட்டும் அன்பாய் அமையும்

இல்லாளை தாய்க்கு இணையாய் வைத்திடின்
இல்லாகும் அமைதி இல்லத்தில்

பெற்றோர் மகன்வாழ்வில் மணமுடிந்தும் முதன்மையிடம்
பெற்றிடின் சிறந்திடும் வாழ்வு

மருமகள் திருமகளாக வேண்டின் மாமியார்
அருமையைப் போற்றிடல் வேண்டும்

ஆற்றல் முழுதும் வெளிப்படல் இயலாதாம்
ஏற்பின் இல்லாள் பணியினை

கணவர் தமக்கு மட்டுமே உரியர் எனும்
துணைவியர் கெடுத்திடுவர் குடி

இல்வாழ்வு(தொடர்ச்சி)

ஏப்ரல் 4, 2011

ஆற்றல் முழுமையும் வெளிப்படுத்தல் இயலா,
ஏற்றிடின் இல்லாள் பணியினை

பெற்றோர் மகன்வாழ்வில் மணமுடிந்தும் முதன்மையிடம்
பெற்றிடின் சிறந்திடும் வாழ்வு

இல்வாழ்வு

ஏப்ரல் 4, 2011

கணவர் தமக்கு மட்டுமே உரியர் எனும்
துணைவியர் கெடுத்திடுவர் குடி

இல்லாளை தாய்க்கு இணையாய் வைத்திடின்
இல்லாகும் இல்லத்தில் அமைதி

மனைவிக்கு அன்னையினும் முதன்மை தருவார்
நற்செயலாற் றும்எண்ணமி ழப்பர்

உடன்பிறந்தார் துணைவியர் திறமைக்கேற்ப உழைத்திடின்
நடத்திடலாம் கூட்டுக்குடித் தனம்

விலை உயர்வு

பிப்ரவரி 5, 2011

உற்பத்தி உயராது ஊதியம் உயர்ந்திடின் விலை
உயர்வு தவிர்க்க இயலா

ஊழ்/கடவுள் தொழுகை

பிப்ரவரி 1, 2011

தலைவிதி தவிர்க்க இயலாதெனின் நாளும் ஆண்டவரைத்
தொழுவதில் ஊழ் அன்றிநன்மை ஏது?

குறட்பாக்கள்

ஜனவரி 16, 2011

உறவு நட்பு மறந்து யாவரும் ஒன்றேஎன
உணர்ந்திடுவர் உயர்நிலை அடைந்தார்

நாடு இனம் மொழி என எல்லை இல்லாகும்
உயர் அன்பு உடையார்க் கு

பிற்காலத் தார்க்கு தற் காலத்தார் கடன் என்ப
மொழி இனம் மதம் அழியாது காத்தல்

அறிவிற்கு ஒவ்வாதன தவிர்த்தல் தவறில எனினும்
மறக்காது இருத்தல் நன்றாம்

யாவும் ஆண்டவர் செயல் எனின் தீயோர் தீயவரல்ல
நல்லோரும் நல்லவர் அல்ல

விரும்புதலை முயன்றலினும் இருப்பதற் கேற்ப விருப்பை
திருப்பிக் கொளல் நன் றாம்

தற்காலத்தார் கடனாம் முற்காலத்தார் பெருமை
போற்றி மறையாது காத்தல்